மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சு விடுக்கும் விசேட அறிவிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட 65 பேரில் 61 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன், வெளியிலிருந்து அடையாளங் காணப்பட்டவர்களில் இரண்டு பேர், நாரஹேன்பிட்ட தாம்பரே மாவத்தையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு பேரில் ஒருவர், டொரிங்டன் பகுதியின் 60 ஆவது தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் , மற்றைய நபர் ஹெவ்லொக் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் மாநகர சபை பணியாளர் ஒருவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் PCR பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 400 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முல்லேரியாவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆய்வுகூடம், விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், இதன்பின்னர் இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனை திறனை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 588 பேர் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 126 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 455 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்தை ஆரம்ப வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆரம்ப வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆரம்ப வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆரம்ப வைத்தியசாலை மற்றும் கடற்படை வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும், இலங்கையில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், கடந்த ஐந்து நாட்களிலேயே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அதிகமான நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

இதற்கமைய, கடந்த 23 ஆம் திகதி 38 பேரும், 24ஆம் திகதி 52 பேரும், 25 ஆம் திகதி 40 பேரும், 26 ஆம் திகதி 63 பேரும் நேற்றைய தினம் 65 பேரும் அடையாளங்காப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

Developed by: SEOGlitz