கொரொனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயிரழந்தவரின் உடலை கொண்டு செல்வதற்குகுறித்த ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதேவேளை covid 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு பயன்படுத்தப்படும் சுமார்ஆயிரம் ஆடைகளை வழங்க முடியும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்திருந்த நிலையில் சுகாதார அமைச்சு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில்சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் sunil dealwis தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் சுமார் 300 ஆடைகள் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது