கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக கனடா இலங்கைக்கு 7 தசம் 5 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது,
கொரோனாவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த நிதியுதவியின் முக்கிய நோக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதிய வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது,
கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாதிபதி செயலணியின் தேசிய சமாதனப் பேரவை தற்போது செயற்பட்டு வருகின்றது,
இந்ம நிதியினூடாக கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன,
மேலும் அங்கவீனமுற்றவர்கள்,பெண்தலைமைத்துவக் குடும்பங்கள்,அநாதை நிலையங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன,