உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கரந்தகொல்லநீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணி மேலும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த பின்னர் இலங்கை மின்சார சபையினால் நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாவை சேமிக்ககூடியதாக இருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகளை நேற்றைய தினம் பார்வையிட்டதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவோட் மின்சாரம் தேசியமின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நிர்மாணப்பணிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த கால எல்லைக்குள்நிறைவுபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் குறித்து அமைச்சரவையில்அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.