மெய்ப்பொருள் காண்பது அறிவு

எலிக்காய்ச்சலால் உயிரிழப்பு …. கொரோனா விதிமுறையில் இறுதிக்கிரியை …!

- Advertisement -

எலிக்காய்ச்சல் நோயினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியொருவரின் இறுதிக்கிரியைகள் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளது.

கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய்த்தாக்கத்திற்குள்ளான நிலையில் நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர் எலிக்காய்ச்சல் நோய்தாக்கத்திற்குள்ளான நிலையில் கடந்த 18 ஆம் திகதி கொழும்பு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வெலிசறை கடற்படை முகாமின் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என றாகமை நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz