மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு : மேலும் 196 பேர் கைது!

- Advertisement -

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 6 மணி நேரத்துக்குள் 196 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை 06 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 6 மணி  நேர காலப்பகுதிக்குள்ளேயே  குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 64 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன

இதற்கமைய, நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட  கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மாலை 06 மணி முதல் இன்றைய தினம் நண்பகல் 12  மணி வரையான காலப்பகுதியில் 38 ஆயிரத்து 762  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 09 ஆயிரத்து தொள்ளாயிரத்து 73 வாகங்கள் இதுவரை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்றும் தொடர்கின்றது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நாளை முதல் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு  இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz