மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது!

- Advertisement -

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்ளேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன்,  குறித்த காலப்பகுதிக்குள் 169 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைய,  கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்றைய தினம் காலை 06  மணி வரையிலான காலப்பகுதியில் 34 ஆயிரத்து 733 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 8ஆயிரத்து 883 வாகனங்கள் இதுவரை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு  குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கபபட்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz