ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அத்தியவசியமற்ற தேவைகளுக்காக பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதாரமற்றும் பாதுகாப்புத் துறையினருக்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமாக ஐயாயிரத்து 700 பேருந்துகளும், தனியார் துறைக்கு சொந்தமாக 23 ஆயிரம் பேருந்துகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது