மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் நிலை குறித்து ஐ.நா சபை விடுக்கு அறிவிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொலிஸார் மக்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சில நாடுகளில் ஊரடங்கை பயன்படுத்தி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்களை அடக்கி ஆளுவதற்கும் , மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குவதற்கும் அவசரகாலப்பகுதியில் உள்ள அதிகாரத்தை, அரசாங்கங்கள் ஆயுதங்களினால் பயன்படுத்தக் கூடாது எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதே ரீதியில் சுமார் 80 நாடுகளில் அவசரகால நிலை அல்லது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 நாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நைஜீரியா, கென்யா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன். அந்த நாடுகளில் சில தொற்றுநோயுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது

மேலும், கடந்த 30 நாட்களில் ஊரடங்கு உத்தரவு மீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருடன் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன், தென்னாபிரிக்காவில், ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் சவுக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை நைஜீரியாவில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் 18 பேரைக் கொன்றதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz