உயர்கல்வி நிமித்தம் இந்தியாவுக்கு சென்றுள்ள 101 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று இந்தியா நோக்கி பயணித்துள்ளது.
கொரானா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரும் செயற்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது,
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1145 எனும் விமானம் இன்று காலை 6.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் Amritsar நோக்கி பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த விமானம் இன்று பிற்பகல் 2. 55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.