மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து கடற்படை வீரர்களுக்குமான விடுமுறை தற்காலிகமாக இரத்து…!

- Advertisement -

கடற்படை வீரர்கள் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கடற்படை வீரர்களுக்குமான விடுமுறை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

- Advertisement -

60 இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோத்தர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள, தமது சொந்த ஊர்களுக்கு விடுமுறையில் சென்றிருந்த வேளையிலேயே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது

குறிப்பாக, இரத்தினபுரி  , குருநாகல், பொல்கஹவெல, பதுளை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் இருந்த நிலையிலேயே, அவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அனைத்து கடற்படை வீரர்களுக்குமான விடுமுறை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்

எனினும்,இதனால் மேலும் பல கடற்படை வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர்   இசுரு சூரிய பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து...

சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த!

தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது...

புதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்ததின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார். 20...

நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே!

தற்போதைய அரசாங்கம், நாட்டை பாரிய அழிவு நிலைமையிலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

அரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜய சூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள்...

Developed by: SEOGlitz