மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடகு முற்பணங்களின் மீது உச்சபட்ச வட்டி வீதங்கள் நிர்ணயம்!

- Advertisement -

உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5  சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.

கொவிட் – 19 பரவலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

- Advertisement -

இதன்படி, 2020.04.27 முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12 சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.

மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம் பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும்.

– இலங்கை மத்திய வங்கி

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz