மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடக ராசி நேயர்களே இன்றைய தினம் மிகவும் சிறப்பான நாளாக அமையும்…!

- Advertisement -

மேஷம் – எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும்.

ரிஷபம் – விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -

மிதுனம் – கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் இலாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

கடகம் – கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கௌரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பணவரவு கூடும்.

சிம்மம் – தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் இலாபம் கிடைக்கும். வங்கியில் இருப்புகூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

கன்னி – குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும்.

துலாம் – எல்லாவற்றிலும் இலாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம் – வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தனுசு – அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலா கும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

மகரம் – உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்க ளில் செல்லும் போது கவனம் தேவை.

கும்பம் – குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம். திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

மீனம் – தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz