மெய்ப்பொருள் காண்பது அறிவு

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

- Advertisement -

மேஷம் – இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக இலாபத்தை அடைவீர்கள்.

ரிஷபம் – இன்று உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வலிய வந்து சேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

- Advertisement -

மிதுனம் – இன்று குழந்தைப் பாக்கியம் இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். இலாபம் அதிகரிக்கும்.

கடகம் – இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாள்வீர்கள். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்மம் – இன்று எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் நிகழும். விவசாயிகள், தொழிலாளர்களும் நன்மைகள் வந்து சேரும். சிற்சில திண்டாட்டங்களும் வந்து வந்து போகும்.

கன்னி – இன்று நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும். சந்தாண பாக்கியம் கிட்டும். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரவு கூடும்.

துலாம் – உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம் – நிலம், வீடு ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.

தனுசு – இன்று தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும்.

மகரம் – குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும்.

கும்பம் – வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

மீனம் – இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில் துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz