மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்ம ராசி நேயர்களே உடல் நலனில் சற்று கவனம் தேவை…!

- Advertisement -

மேஷம் – உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.

ரிஷபம் – பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றி இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

- Advertisement -

மிதுனம் – நுணுக்கமான விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பப்பணிகளை முடிப்பதில் தடுமாறினாலும் நன்கு முடிப்பீர்கள். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும்.

கடகம் – உங்களின் செயல்கள் பிறரை திருப்தியடைய செய்யும். சுபநிகழ்வு பற்றிய முயற்சியில் வெற்றி ஏற்படும். முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.

சிம்மம் – ஆசிரியர்கள், பணியாளர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக கையாளவும். உடல் நலனில் கவனம் தேவை. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.

கன்னி – பணியிடத்தில் உங்களது செயலால் மரியாதை அதிகரிக்கும். எதிர்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டை நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்படும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நல்லோரின் ஆசி கிடைக்கும்.

துலாம் – சக ஊழியர்களின் குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். உடல்நலம் பற்றிய கவலை நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம் – நம்பிக்கை இன்மை காரணமாக துாக்கம் இழப்பீர்கள். உடல்நலப் பிரச்னைகளை பெரிதாக நினைத்து பயப்படாதீர்கள். திட்டமிட்டு பணிகளை செய்வீர்கள். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள். உடல்நலப் பிரச்னைக்கு சுய வைத்தியம் செய்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் உங்களிடம் மனம் திறந்து பேசுவார்கள். கோபமாக இருக்கும் யாரையும் சீண்டவேண்டாம். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும்.

தனுசு – பழைய பிரச்னை ஒன்று தலைதுாக்கும். அதை சரிசெய்ய மனைவியின் ஆலோசனை கைகொடுக்கும். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள்.

மகரம் – தொழிலில் இப்போதைக்கு புதிய பங்குதாரரை சேர்க்க வேண்டாம். சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் செய்யும் சிறு முயற்சியிலேயே விரும்பியது கிடைக்கும்.

கும்பம் – சவாலான விஷயத்தில் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமை வெளிப்படும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர். குடும்பத்தேவை பூர்த்தியாகும். உங்களின் செயலில் சிறு மாற்றங்களை செய்வீர்கள்.

மீனம் – மன உறுதியுடன் இருப்பவர் என்ற பெயரை பெறுவீர்கள். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz