மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய ராசிபலன்கள்….

- Advertisement -

மேஷம் – இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழு கவனத்துடன் செய்யுங்கள்.

ரிஷபம் – பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம்.

- Advertisement -

மிதுனம் – காரிய வெற்றி உண்டாகும் நாள். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உங்கள் பொருட்கள் திருடு போகலாம். கவனமுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும், விருதுகளும் கிடைக்கும். எழுத்து பணியில் இருப்பவர்கள் சளைக்காமல் பணியைச் செய்யவும். சூட்டிங் விஷயமாக அலைச்சலும், அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம்.

கடகம் – புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசனை செய்யவும். வாழ்க்கைத்துணையின் பெயரையும் சேர்த்தே புதிய தொழில் தொடங்க வேண்டும். வாகனம் சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த தொழிலானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சிம்மம் – அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த இலாபம் கிடைக்கும்.

கன்னி – கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

துலாம் – மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும்.

விருச்சிகம் – மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும்.

தனுசு – உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

மகரம் – பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.

கும்பம் – மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.

மீனம் – இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்லமுடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மட்டக்களப்பு – அரசடி பகுதி தனிமைப்படுதலில் – காத்தான்குடியில் சில பகுதிகள் விடுவிப்பு.

காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கபட்டுள்ளன. இதேபோன்று, பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ன. அத்துடன், மொணராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும்...

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

Developed by: SEOGlitz