மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய பலன்கள் – ரிஷப ராசி நேயர்களே சற்று கவனம் தேவை…!

- Advertisement -

மேஷம் – நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப் படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும்.

ரிஷபம் – புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனைகளை எடுத்துக் கொள்வது அவசியம். வீண் அலைச்சலும், காரிய தடையும் ஏற்படலாம் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம்.

- Advertisement -

மிதுனம் – இன்று இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

கடகம் – இன்று கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும் தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

சிம்மம் – நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

கன்னி – பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

துலாம் -தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.

விருச்சிகம் – குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கவனமாகவும் கடினமாகவும் உழைப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

தனுசு – வீண் அலைச்சலும், காரிய தடையும் ஏற்படலாம் கவனம் தேவை. குல தெய்வத்தை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

மகரம் – எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.

கும்பம் – விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

மீனம் – ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 103 நிறுவனங்கள்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 103  நிறுவனங்கள்  அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில்  அரச மற்றும் தனியார் துறையினை  உள்ளடக்கியவகையில்  910 நிறுவனங்களில்  நேற்று  மேற்கொள்ளப்பட்ட  விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz