மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு!

- Advertisement -
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று மும்மலப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் நிகழ்வாக சூரன் போர் விளங்குகிறது.
இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்த சஷ்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போர் இடம்பெறுவது வழமை.
இன்று வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி விரத்தின் இறுதிநாளாகும். அந்தவகையில் அந்தணச் சிவாச்சாரியார்கள் புடைசூழ ,மங்கள வாத்தியங்கள் முழங்க வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சுகாதார விதிமுறைகளுடனும், குறைந்தளவிலான பக்தர்களுடனும் ஆலய வளாகத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரர்களுடன் போர் செய்து அவர்களை வதம் செய்து, அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
வவுனியாவில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு! 1 வவுனியாவில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு! 2
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

மின் கட்டணங்கள் குறைக்கப்படுமா? துமிந்த திஸாநாயக்க விளக்கம்…

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, மின் கட்டணங்களை குறைக்கும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி,...

Developed by: SEOGlitz