மெய்ப்பொருள் காண்பது அறிவு

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி!

- Advertisement -

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும்.

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை.

- Advertisement -

இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி புண்ணியம் நமக்கு கிடைப்பதோடு, வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்ள் அனைத்தும் விலகி, துயரங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.

வாயின் மூலம் இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. அந்த முருகப்பெருமானே முழுமையாகச் சரணடைந்து, நம்முடைய ரத்தத்திலும் சதையிலும் முருகப்பெருமானின் நாமம் கலந்து, எல்லாம் அவன்தான் என்ற நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது.

அருணகிரிநாதர் அருளிய முருகப்பெருமானின் மந்திரம் உங்களுக்காக இதோ!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பொருள் – உருவமும் நீ தான், உருவம் இல்லாத அருவமும் நீ தான், இருப்பதும் நீ தான், இல்லாததும் நீ தான், மலரும் நீ தான், மலருக்கு முன் இருக்கும் அரும்பும் நீ தான், ஒளியும் நீ தான், ஒலியும் நீ தான், கருவும் நீ தான், கருவிலிருந்து பிறக்கும் உயிரும் நீ தான், எல்லோருக்கும் குருவும் நீ தான், உன்னையே கெதி என்று உன் பாதங்களில் சரணடைகின்றேன் முருகா! என்பது தான் இதற்கு அர்த்தம்.

நல்லது கெட்டது, இருப்பது இல்லாதது, என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமும் அவனே, எல்லா செயல்பாடிற்க்கும் பின்னால் அவன் தான் இருக்கின்றான் என்று, முருகப்பெருமானை சரணடைந்து, என் வாழ்க்கையை நீயே பார்த்துக்கொள் என்று, உங்களுடைய வாழ்க்கையை முருகப்பெருமானிடம் ஒப்படைத்துவிட்டு, அதன் பின்பு அன்றைய தினத்தை தொடங்க ஆரம்பியுங்கள்.

காலை இறை வழிபாடு செய்யும் போது, முருகப் பெருமானை நினைத்து 6 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

முடிந்தவர்கள் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்துகொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களை விட பாக்கியசாலி, உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்கமுடியாது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கம்பஹாவில் ஏனைய தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz