மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா?

- Advertisement -

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது.

பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள்.

- Advertisement -

எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

வெளித் தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள்.

பிடிக்காதவர்களின் தொடர்பை உடனே அறுத்தெறிவார்கள். இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள்.

எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி தன்னுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்குத் தனிமை பிடிக்காது.

சமூக வாழ்வில் ஈடுபட்டு தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும்.

இவரது பேச்சுத் திறமை பிறரை இரசிக்கும்படி வைக்கும். புத்தி கூர்மையும், அறிவாற்றலும் நிறைந்திருப்பதால் எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளலாமல் நழுவி விடுவார்கள்.

அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதை பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள்.

முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு.

நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள். கண்களில் ஒருவிதமான கவர்ச்சி இருக்கும். வேகமாக நடப்பார்கள். பேச்சில் இனிமை இருக்கும்.

இவர்கள் அதிகமாக சிந்தனை செய்வதால் நரம்பு பலவீனம் அடைந்து நரம்பு தளர்ச்சி நோய் உண்டாகும். தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும்.

வாயுத் தொல்லையும் இருக்கும் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல் புண்ணும் ஏற்படும். நன்றாக ஓய்வெடுப்பதும், உணவு பழக்க வழக்கத்தில் சரியான முறையைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார்.

நல்ல அறிவாற்றலும், கல்வித் தகுதியும் உடையவராக இருப்பார். சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையே இவர்களுக்கு அமையும்.

கிடைக்காதவற்றிற்கு ஏங்காமல், இருப்பதை வைத்து திருப்தியுடன் வாழ்வர்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவும் திருப்தியளிப்பதாக இருக்கும்.

உற்றால், உறவினர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.

போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும். ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும்.

சேமிப்பும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம்.

அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும்.

வங்கி கணக்கர் தொழில், ஆடிட்டர் தொழில், கணிப்பொறி சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு என இது போன்றவற்றில் உயர்வு கிட்டும்.

ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில், எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். அறிவு பலத்தால் எதையும் சாதிப்பார்கள்.

சிரிக்க சிரிக்க பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்கும். இவரின் நகைச்சுவையுணர்வால் பலரை கவர்ந்திழுப்பர்.

1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூப்பரான நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்…

குழந்தைகளுக்கு Pancake என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து Pancake செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட், கேரட் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெங்காயம் -...

கொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உயிரிழப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த...

Developed by: SEOGlitz