மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களா? இப்படித்தான் இருப்பார்களா?

- Advertisement -

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.

தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது.

- Advertisement -

தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும்.

நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.

தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும்.

பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள்.

இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.

வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது குறைவு.

மனது சொல்வதை கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்

வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும்.

குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கலாம்.

ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள்.

கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.

மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும்.

உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயன்கள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். இரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றது.

சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள்.

அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

கடற்றொழிலாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக, கொழும்பு வரையில் காற்றின் வேகம் அதிகரித்து...

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக fifa தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களின் பின்னர்...

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை : கமல் குணரட்ன!

அரச நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்ட  அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

புதிய வாகன கொள்வனவாளர்களுக்கான முக்கிய தகவல்!

எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள்  மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு...

Developed by: SEOGlitz