மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய இராசிபலன் – 08.09.2020

- Advertisement -

மேஷம் – வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம்.உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

ரிஷபம் – பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர் பகை அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம் – தாய்வழி ஆதரவு ஓரளவு உண்டு. உடல்நலம் சீராகும். எதிர்பார்த்த மாற்றங்களும், நீண்ட தூரப் பயணங்களும் உருவாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு நன்மை தரும்.

கடகம் -பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், கல்யாண வாய்ப்புகள் ஏற்படும். தாய் மற்றும் சகோதரத்தின் ஒத்துழைப்பு திருப்தி தரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம், இனிய மாற்றமாக அமையும். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம் -ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வுடன் பொறுப்புகளும் கிடைக்கலாம்.

கன்னி – முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

துலாம் – சம்பளப் பாக்கிகள் வருவதில் தாமதம் உருவாகும். திடீரென ஊர் மாற்றங்களும் வந்து சேரும். அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

விருச்சிகம் -பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு குறிப்பிட்டபடி வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அதிகார பதவி கூட உங்களுக்கு வரலாம். வெளிநாடு, அல்லது பிற மாநிலங்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்பும் கைகூடலாம். உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு -தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது உகந்தது. உடன் பிறப்புகளின் உதவியும், தாயின் ஒத்துழைப்பும் ஓரளவே கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு பயணங்களும், இடமாற்றங்களும் வந்து சேரும். தடைப்பட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கலாம்.

மகரம் -பணியாளர்களின் தொல்லை உண்டு. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. குடும்பத் தகவல்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தாய் வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்களில் ஒரு சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். நற்பலன்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடுகட்ட எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

கும்பம் -தாய்வழி ஆதரவும், சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் மற்றும் நகைகள் வாங்கும் யோகம் உண்டு. சொந்த பந்தங்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கேட்காமலேயே கிட்டும். கேட்டுப்பெற வேண்டிய சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள்.

மீனம் – தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் உருவாகலாம். கேட்ட சலுகைகளை மேலதிகாரிகள் தர மறுப்பர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz