மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய இராசிபலன் – 07.09.2020

- Advertisement -

மேஷம் – மங்கல நிகழ்ச்சிகள் பல வீட்டில் நடைபெறம். தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம் – பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வெற்றிபெற்ற கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், முத்தான முதல் ஆளாக மாறுவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

- Advertisement -

மிதுனம் – ஆரோக்கியம் சீராகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு எடுப்பீர்.

கடகம் – பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. கணவன்- மனைவிக்குள், உடன் இருப்பவர்களால் சில பிரச்சினைகள் வரலாம். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், கல்யாண வாய்ப்புகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல முடிவு ஏற்படும்.

சிம்மம் – சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உறவினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் முன்னேற்றம் அமையும். கணவன் – மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பொன், பொருள் வாங்குவீர். புதிய தொழிலை உங்கள் பெயரிலேயே தொடங்க குடும்பத்தில் அனைவரும் சம்மதிப்பர்.

கன்னி – வரவும், செலவும் சமமாக இருக்கும். சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல் – வாங்கல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். இல்லத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

துலாம் – வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பச்சுமை அதிகரிக்கும். உறவினர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். சுப காரியங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள். கணவன் – மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகம் இருந்தால்தான் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

விருச்சிகம் – புதிய முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரத்தில் உயர்வு, எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல், தொழிலில் இருமடங்கு லாபம் கிடைத்தல் போன்றவை அனைத்தும் நடைபெறும்.

தனுசு -பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் இடையூறு ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவரும். மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

மகரம் -கொஞ்சம் வளர்ச்சியைக் கொடுக்கும். சுப விரயங்கள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணமுடன் செயல்படுங்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம் -கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கனிவும், பாசமும் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாய்வழி ஆதரவும், சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இருக்கும்.

மீனம்- உறவினர் பகை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சீர்கேடுகள் உருவாகும். நினைத்த நேரத்தில் நினைத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண முடியும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன்சுமை உருவாகலாம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

Developed by: SEOGlitz