இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது.
இதைனையடுத்து, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பித்து 18 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ரூ.300 கட்டண தரிசனம் இரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒன்லைன் மூலம் பதிவுசெய்யும் பக்தர்கள் ஒருநாளைக்கு 10 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் வழக்கமான சாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் ரூ.1 கோடியே 16 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.