திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் இலங்கையின் பக்தியை சான்றுக் கூறும் ஆலயமாகும்
இந்த ஆலயம் திருகோணமலை நகரில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோயிலில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.
ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துக்கேயரின் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்ச நாளாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்ஷவம் நடைபெறுகிறது.
ஒன்பதாம் நாள் இரதோற்ஷவம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.
மேலும் விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.