மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோர் கவனிக்க வேண்டியவை!

- Advertisement -

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோரின் கைகள் நன்கு சுத்தப்படுத்தப்படும் எனவும், பின்னர் வாக்குச் சாவடிக்கு வந்த பின்னரும் கைகள் சுத்தப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது,  முடியுமெனில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களை கொண்டு வருமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.

அத்துடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், செல்லுபடியான ஆள் அடையாள அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை அல்லது மதத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அட்டைகள் இல்லாத நபர்கள், கிராம அலுவர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வாக்களிப்பதற்காக வழங்கப்படும் வாக்குச்சீட்டின் மேல் புறத்தில், கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை, கீழ் புறத்தில் விருப்பு இலக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முதலில் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடியிட வேண்டும் எனவும், அதன் பின்னர் கீழ் உள்ள இலக்கங்களை தெரிவு செய்து தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விருப்பு வாக்குகளை வழங்கும் போது, ஒருவர் அல்லது  இருவர் அல்லது மூன்று வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வழங்க முடியும் எனவும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவதற்கு முன்னர் வேட்பாளர்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் என்ற போதிலும், ஒரு கட்சியை மாத்திரமே தெரிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரே கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது இருவர் அல்லது மூவருக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...