மெய்ப்பொருள் காண்பது அறிவு

எந்தவொரு காரணத்திற்காகவும் பெசில் ராஜபக்‌ஷவை அரசியலில் இருந்து நீக்கமுடியாது- லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன

- Advertisement -

எந்தவொரு காரணத்திற்காகவும் பெசில் ராஜபக்‌ஷவை அரசியலில் இருந்து நீக்கமுடியாது என, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த கட்சியின் வேட்பாளர், லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்குவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சரொருவர்  இது பற்றி பலருடன் பேசியிருக்கின்றார். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடளித்திருக்கின்றோம்.  நுட்பமான  விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். பெசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்காமல் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று குறித்த அந்த முன்னாள் அமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவது மாத்திமின்றி பசில் ராஜிபக்ஷவுக்கு விஷேட பாதுகாப்பை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம்.அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பமுள்ளது. எனினும் சதித்திட்டம் மூலம் பசில் ராஜபக்ஷவை அரசியலிலிருந்து நீக்க முடியாது. அவர் சிரேஷ்ட அரசியல் தலைவர் என்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அரசியலிலிருந்து விலக்க முயற்சிக்கலாம். எனவே தான் விஷேட பாதுகாப்பை கோருகின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...