மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லாட்சி அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகைளை சீர் செய்வது இலகுவான விடயமல்ல – பிரதமர்

- Advertisement -

நல்லாட்சி அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகைளை சீர் செய்வது இலகுவான விடயமல்ல என, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் கட்சியின் தலைவர்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நல்லாட்சி அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகைளை சீர் செய்வது அவ்வளவு இலகுவான விடயமல்ல. கடனை செலுத்த முடியாத காரணத்தினால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை  சீனாவுக்கு  200 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு  விடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால்  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு  நல்லாட்சி அரசாங்கம்  உடன்படிக்கை கைச்சாத்திட்டது. அரச சொத்துக்கள்  வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதாயின் அதற்கு முன்னர் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்டாய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.எவ்வாறாயினும் எஞ்சிய வளங்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை  இன்று ஏற்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...