மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த கால அமைச்சர்களினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை – ஹிரண்யா குற்றச்சாட்டு

- Advertisement -

நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மூவர் இருந்த போதும் அங்குள்ள  இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறமைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட  வேட்பாளர் வழக்கறிஞர் ஹிரண்யா ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

நுவரெலியா – ராகலை பகுதியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன்,  எஸ்.பி.திசாநாயக்க, சி.பி.ரத்நாயக்க மற்றும் நவின் திசாநாயக்க ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக பதவியேற்று  இருப்பினும் தங்களது மாவட்டத்தில் உள்ள பிள்ளைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு சொற்பளவேனும் சேவை செய்யவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, கால்நடை மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு போன்ற அமைச்சுகள் நுவரெலியா மாவட்டத்திற்கே உரித்துடையதாக இருந்துள்ளன.

இருப்பினும், அந்த அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்கள் எவரும் நுவரெலியா மாவட்ட மக்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் விவசாயத்துறையை மேம்படுத்துவது குறித்து எந்தவொரு நடவடிக்கையும்  எடுக்கவில்லையென ஹிரண்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு  தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்காத முன்னாள் அமைச்சர்கள் அவற்றை பணத்திற்காகவும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறானதொரு நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் அது உங்களில் வாக்குப் பலத்தினால் மட்டுமே முடியுமென ஹிரண்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலம் காலமாக மக்களை ஏமாற்றி வரும் அரசியல் வாதிகளுக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...