மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.கவினால் மட்டுமே மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றலாம் : ரணில்!

- Advertisement -

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே முடியும் என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜயவடனகம  பகுதியில் இன்று இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

“பச்சை நிறம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரித்தானது என சட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுக்களுக்கான சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி  அச்சத்தை இல்லாது செய்ய   நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு , மக்கள் நம்பிக்கையினை  வெல்வதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே முடியும் .

நாட்டின் பொருளாதாரம்   இன்று பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

எனவே வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சி வாக்களிப்பதன் ஊடாக  மாத்திரமே இவை அனைத்தும் நிறைவேறும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...