மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து 835 முறைப்பாடுகள் -CMEV

- Advertisement -

கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதிக்குள் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து 835 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சட்டவிரோத பிரச்சாரம் குறித்து 298 முறைப்பாடுகளும், சட்டவிரோத முறைப்பாடுகள் குறித்து 186 முறைப்பாடுகளும், சுகாதார வழிகாட்டல்களை மீறியமை குறித்து 132 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், கட்சி ரீதியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது 430 முறைப்பாடுகளும், ஐக்கிய மக்கள் சக்தி மீது 151 முறைப்பாடுகளும், ஐக்கிய தேசியக் கட்சி மீது 52 முறைப்பாடுகளும், இலங்கை தமிழரசுக் கட்சி மீது 30 முறைப்பாடுகளும், கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ரீதியாக, குருணாகல் மாவட்டத்தில் 66 முறைப்பாடுகளும், பதுளை மாவட்டத்தில் 68 முறைப்பாடுகளும், அநுராதபுரம் மாவட்டத்தில் 57 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 54 முறைப்பாடுகளும், வன்னி மாவட்டத்தில் 52 முறைப்பாடுகளும், பதிவாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...