மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித்தின் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது : சுசில் பிரேமஜயந்த!

- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபா வழங்கும் சஜித்தின் திட்டம் நடைமுறை சாத்தியமற்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கப் போவதாக சஜித் கூறுகிறார். தற்போதும் மாதாந்தம் அரச சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

14 இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டும். 6 அரை இலட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரச அலுவலகங்களை நடத்திச் செல்ல மாத்திரம் 100 பில்லியன் ஒரு மாதத்துக்கு தேவை.

சஜித் மாதாந்தம் 20 ஆயிரம் கொடுத்தால் என்ன நடக்கும்? 60 இலட்சம் குடும்பங்கள் நாட்டில் உள்ளன. ஆகவே ஒரு மாதத்துக்கு 120 பில்லியன் தேவை.

இரண்டையும் சேர்த்தால் மாதாந்தம் 220 பில்லியன் செலவாகும். ஆகவே ஒரு வருடத்துக்கு 2640 பில்லியன் ரூபா தேவை. ஆனால் கடந்த வருட மொத்த வரவு செலவு இதைவிடக் குறைவு.

எந்தவொரு விடயமும் நடைமுறை சாத்தியமுடையதாக இருக்க வேண்டும். எமக்கு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே தேவை.

மக்களின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். விவசாயத்தை பலப்படுத்த வேண்டும். வியாபாரங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறுதான் உலக நாடுகள் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...