மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பந்தனை இம்முறை தோற்கடிக்க வேண்டும் : தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்!

- Advertisement -

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு, தொடர்ந்து 20 வருடகாலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

இம்முறை தேர்தலின் போது ஒரு மாற்று நபரை தெரிவு செய்ய பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு முற்றிலுமாக அவர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சுகமான பல சலுகைகளும் கிடைத்தன. ஆனால் வாக்களித்த மக்களின் எந்தவொரு பிரச்சினையும் தீரவில்லை.
புதிய அரசியல் யாப்பென்னும் நடக்கமுடியாத, வெற்றுக் கோசமொன்றுடன் ஜந்துவருடங்கள் வீணாகிப்போனது.
திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாகவும் அக்கறையாகவும் இருக்கின்றோம். அதற்காக எங்களால் முடிந்த அத்தனையும் செய்வோம்.
சம்பந்தன் ஜயாவின் வயதையும் அவரது உடல்நிலையையும் கருத்தில்கொண்டு, அவருக்கான ஓய்வை கொடுக்கவேண்டியதும் எமது கடமையாகும். அதற்கான வேளை கனிந்துவிட்டது.
இனியும் நாம் அதில் தாமதிக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அல்லது தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நிற்கும் ஏனைய ஏதோவொரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், நாம் எமது திருகோணமலை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும்.
இன்று என்றுமில்லாதவாறு தென்னிலங்கை கட்சிகளும், எண்ணிலடங்கா சுயேற்சைக் குழுக்களும் தமிழ் வாக்குகளை சிதறடிக்க முற்படுகின்றன.
வாக்குகளை கேட்பது கட்சிகளின் உரிமை ஆனால் ஒரு முறைக்கு, பல முறை சிந்தித்து, தமது வாக்குகளை சரியானவர்களுக்கும், சரியான கட்சிகளுக்கும் வழங்கவேண்டியது மக்களின் உரிமை.
கூட்டமைப்பின் தவறுகளால் நமது இளைய தலைமுறை திசைமாறிச் செல்லும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
கடந்தகாலத்தின் தவறுளை புறம்தள்ளி, எதிர்காலம் நோக்கி சிந்தியுங்கள். உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் மிகவும் பெறுமதியானவை.
அதனை பயன்படுத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் சரியாக பயன்படுத்துங்கள். வீணாக்கிவிடாதீர்கள். தமிழ் மக்கள் எல்லோரையும் வாக்களிக்கத் தூண்டுகள். அனைவரும் வாக்களிப்பது மிகவும் அவசியமானது.
தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு மாற்றங்களை வேண்டிநிற்கின்றது.
நமது நாளைய தலைமுறை குற்றவுணர்வுடன் வாழநேரிடலாம். எனவே திருகோணமலை தமிழ் மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டிய வேளை வந்திருக்கின்றது. காலம் வாய்ப்புக்களை தொடர்ந்தும் தராது என்பதை உணருங்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...

வாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும்  சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று...