மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலதிக பிரசார நடவடிக்கைகளுக்கான கோரிக்கை நிராகரிப்பு!

- Advertisement -

ஒகஸ்ட் மூன்றாம் திகதி அன்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிராகரித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கட்சிகளின் செயலாளர்களினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது உள்ளதாக கட்சிகளின் செயலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்காரணமாக எதிர்வரும் ஒகஸ்ட் மூன்றாம் திகதி அன்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதின்படி, இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது கட்சி பிரதிநிதிகளை ஒரு மண்டபத்திற்கு அழைத்து தெளிவுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...