மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது: கஜேந்திரகுமார்!

- Advertisement -
அரசாங்கத்துடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு  முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எமது பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தேர்தலுக்கு பின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது தமிழ் சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகிறது.
தமிழர் தரப்பின் ஆதரவோடு அது நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதற்கு பின் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை உள்ளது என்று கூற முடியாது.
அதனால் மக்களுக்கு தார்மீக கடமை இருக்கிறது. அந்த புதிய அரசியலமைப்பை தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
உண்மையில் அதில் பிரச்சனையை தீர்க்க வழிவகை இருந்தால் ஆதரிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது ஒற்றையாட்சி அரசியலமைப்பு.
வார்த்தை ஞாலங்களை கூறுகிறார்கள். அந்த இடைக்கால அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழ் மக்களின் உரிமைகள், கொள்கைகள் என்பவற்றை உதாசீனம் செய்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது.
அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இந்த இனத்திற்கு செய்யும் பெரிய துரோகம். அதற்கு வேறு வார்த்தை கிடையாது. எமது மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
கடந்த 72 வருடங்களாக நிராகரித்த அரசியலமைப்பை ஆதரிக்க சதி செய்கிறார்கள். அதில் பெளத்திற்கு முன்னுரிமை. அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கப் போகிறது.
அதனால் இம்முறை மக்கள் விழிப்பாக இருந்து வாக்களிக்க வேண்டும். நாம் கடந்த 10 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுகளை சுட்டி காட்டி வருகின்றோம்.
போர் முடிவடைந்து 8 மாதங்களில் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழையாக போகின்றது என்று தெரிவித்து தனித்து வந்தோம்.
தனித்து வந்தால் தோற்போம் என தெரிந்தும் நாம் எமது மக்களுக்காக வெளியில் வந்து கடந்த 10 வருடங்களாக அவர்கள் விடும் தவறுகளை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...