மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படக் கூடியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் : விமல் வீரவன்ச!

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய பொருத்தமான உறுப்பினர்களை பொதுமக்கள் தெரிவு செய்யவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“எதிர்வரும் 10 ஆண்டுகள் கோட்டாபய ராஜபக்ச தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பவேண்டும்.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டு கூட்டணி வெற்றிபெறும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டுப்பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவுசெய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராக செயற்பட்டுவருகின்றார்.

அவர் ஜனாதிபதியானதால் கொரோனா வைரஸ் எமது நாட்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதேநேரம் ரணில் – மைத்திரி  ஆட்சிகாலமாக இருந்திருந்தால்  நிலைமை மோசமடைந்திருக்கும்.

ஆனால் அந்த நிலைமை முறியடிக்கப்பட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான தலைவரை தெரிவு செய்தோம்.

அவரது ஆட்சிக் காலம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும்.

எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு  பொதுமக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...