மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

- Advertisement -

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது.

இவ் உரையாடலானது 19வது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இவ் உரையாடலினை மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. சிவகரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வானது மெய்யியல் துறை மாணவர்களினாலும் பிற துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும் நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப் பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மெய்யியல் ரீதியான சிந்தனையை மையப்படுத்தியதாகவும் இவ் உரையாடலானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும் பிற பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ் இணையவழி நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இவ் வாரம் இந்த நிகழ்வில் மெய்யியல் துறையின் மாணவர்களான எஸ்.வாசுகி – அதீத சிந்தனைகளும் அதன் தாக்கங்களும், எஸ்.கிருத்திகா- தன்னை நேசித்தல், பி.கம்ஷாஜினி – மெய்யியலின் அடிப்படை வினாக்களும் மனித வாழ்க்கையில் அதன் செல்வாக்கும், என்.மதுமதி – பகுப்பாய்வு மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது ஆகிய தலைப்புக்களில் பங்கேற்று உரையேற்ற தயாராக உள்ளனர்.

கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும், இணையவழியாக Zoom செயலி ஊடாக இந் நிகழ்வானது மக்களின் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று இவ்வாரமும் நடைபெறுகின்றது.

இந்த உரையரங்கில் Meeting ID: 828 322 6454 என்ற அடையாளத் தரவை அளிப்பதனூடாக உள்நுழைந்து பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz