மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணப் மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம்

- Advertisement -

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (20-06-2021) மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது.

இவ் உரையாடலானது 20வது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இவ் உரையாடலினை மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. சிவகரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வானது, மெய்யியல் துறை மாணவர்களினாலும் பிற துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும், நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப் பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மேலும் பல மாணவர்களின் ஆளுமை விருத்தியினை வளப்படுத்தக் கூடியதாகவும், அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் இவர்களுடைய் கருத்துக்கள் அனைத்தையும் மெய்யியல் ரீதியான சிந்தனையுடன் தொடர்புபடுத்தியதாகவும் இவ் உரையாடலானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும் பிற பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ் இணையவழி நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இவ் வாரம் இந்த நிகழ்வில், மெய்யியல் துறையின் மாணவர்களான ஆர்.பவித்திரா – வாழ்க்கையில் வெற்றிபெற உணர்வுசார் நுண்ணறிவு ஏன் முக்கியமானது, அதை எவ்வாறு உருவாக்க முடியும், எஸ்.சாருகா- தீர்ப்பிடும் மனப்பான்மையுள்ள நபர்களை எவ்வாறு கையாள்வது, எம்.சாரா – பல்கலைக்கழக வாழ்கையில் மிகவும் வெற்றிகரமான மாணவராகத் திகழ்வது எப்படி, கெ.கபில்ஸ்டன் – அர்த்தமுள்ள வாழ்க்கையில் மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாடு ஏன் முக்கியமானது, ஆகிய தலைப்புக்களில் பங்கேற்று உரையேற்ற தயாராக உள்ளனர்.

கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில், நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும், இணையவழியாக ZOOM செயலி ஊடாக இந் நிகழ்வானது மக்களின் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று இவ்வாரமும் நடைபெறுகின்றது.

இந்த உரையரங்கில் Meeting ID: 828 322 6454 என்ற அடையாளத் தரவை அளிப்பதனூடாக உள்நுழைந்து பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz