மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மெய்யியல் துறையின் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

- Advertisement -

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது.

இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல தடைகளை தாண்டி 14வது வாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இவ் உரையாடலினை மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. சிவகரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வானது மெய்யியல் துறை மாணவர்களினாலும் பிற துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும் நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப் பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மெய்யியல் ரீதியான சிந்தனையை மையப்படுத்தியதாகவும் இவ் உரையாடலானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும் பிற பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ் இணையவழி நிகழ்வினை சிற்ப்பித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இவ் வாரம் இந்த நிகழ்வில் மெய்யியல் துறையின் மாணவர்களான வை.ரொயன் – என்னுடைய வாழ்க்கை குறித்த ஆர்வம், என்.எம்.அபதுல்லா- வாழ்க்கை என்பது சவாலானது, எஸ்.சாருகா – நல்லொழுக்கமும் அர்த்தமுள்ள வாழ்க்கையும், வி.மெலனி – சிறந்த சிந்தனையாளர் ஆகிய தலைப்புக்களில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில் நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும் இணையவழியாக Zoom செயலி ஊடாக இந் நிகழ்வானது நடைபெறுகின்றது.

இந்த உரையரங்கில் Meeting ID: 828 322 6454 என்ற அடையாளத் தரவை அளிப்பதனூடாக உள்நுழைந்து பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz