பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை ஆற்றவுள்ளார். “பாரதியியல்: புதிதாகக் கண்டறியப்பட்டவை” என்ற தலைப்பில் அவருடைய உரை அமைகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு நாளை (28-02-2021) மாலை 7.00 மணிக்கு கூகிள் மீட் செயலி மூலம் (https://meet.google.com/aet-gxkp-efn) இணையவழியில் இடம்பெறுகின்றது.
பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களின் பிரதான உரை குறித்த கருத்துரையை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.