மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்!

- Advertisement -

சீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம்.

இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின் மிகப்பெரிய கல்லறை என்றே குறிப்பிடுகின்றனர்.

- Advertisement -

காரணம் இந்தக் கல்லறையை கட்டி முடிப்பதற்குள் 10 இலட்சம் பேர் வரை இறந்து இருக்கலாம் எனவும் அவர்கள் அந்த சுவருக்கு அடியிலேயே புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

சீனப் பெருஞ்சுவரைக் குறித்து சில சுவாரசியத் தகவல்கள் இன்னும் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் நீளமான சுவர்.

அதுவும் நாட்டிற்கே எல்லையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்தச் சுவரை யாராலும் தாண்டிச் செல்ல முடியாது எனக் கருதப்படுகிறது.

ஆனால் கி.பி.1211 ஆம் ஆண்டு மங்கோலிய ஆட்சிக் காலத்தில் செங்கிஸ்கான் இந்த சுவரின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு சீனாவிற்கு உள்ளே படையெடுத்து சென்றிருக்கிறான்.

மேலும் உலகின் நீளமானது மட்டுமல்ல, மிக அகலமான சுவராகவும் இது இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

ஒரே நேரத்தில் 5 வீரர்கள் அல்லது 10 குதிரைகள் இந்த சுவரில் நடந்து செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தச் சுவரின் நீளம் 8,850 கி.மீ எனக் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்தக் கணக்கு தவறு என்பதை கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு மதிப்பீடு தெளிவுப் படுத்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21,196 கி.மீ. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சுவரை சீனர்கள் வின் லி சாங் செங் அதாவது great wall of china என அழைக்கின்றனர்.

மேலும் இது ஒரு மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது அல்ல.

இதன் கட்டடிட வடிவமைப்பு பல மன்னர் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒன்று என்றும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்தச் சுவர் கின்ஷீ ஹீ வாவ் மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது என ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

ஆனால் இந்த மன்னன் தனது நாட்டு எல்லையை வரையறைப்படுத்த விரும்பினான்.

ஆனால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் இதைச்செய்ய முடியாமல் போனது.

இந்த மன்னனுக்கு 100 ஆண்டுகள் கழித்தே இந்த சுவர் கட்டும் பணி துவங்கியது என ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கி.மு.5 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணி கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இதன் ஒட்டுமொத்த கட்டுமான பணி 400 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளைக் கூட தாண்டலாம் என இருவேறு கருத்துகள் இருந்து வருகிறது.

இந்தச் சுவரை முழுவதும் கட்டி முடிக்க 20 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்தார்கள் என்றும் அதில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும் உயிரிழந்தவர்களை அந்த சுவருக்கு அடியிலேயே புதைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் சீனப் பெருஞ்சுவர் உலகின் மிகப்பெரிய கல்லறை எனச் சிலரால் அழைக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

இலங்கை Vs இங்கிலாந்து : முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்…!

மினுவங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுப்புதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுமா…?

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தில் முதற்கட்ட தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, Oxford-AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி...

Developed by: SEOGlitz