தமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள்.
ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில் இருந்துவாறே குடும்பத்தாருடன் மிகவும் சந்தோஷமாக இப் பண்டிகையை கொண்டாடுங்கள்.
இனி மிகவும் ருசியான முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்…..
முதலில் பச்சை அரிசி மாவை எடுத்த கொள்ளுங்கள்.
பின் பாசி பருப்பு – 200 கிராம் மற்றும் இட்லி அரிசி -175 கிராமையும் எடுத்து வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் முதலில் எடுத்துக் கொண்ட பச்சை அரிசி, பாசி பருப்பு மற்றும் இட்லி அரிசி ஆகியவற்றுடன் 200 கிராம் பொட்டுக் கடலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அரைத்து வைத்த கலவையில் உப்பு, பெருங்காயத்ததூள் மற்றும் கருப்பு எள்ளுடன் வெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
கலவையை நன்கு பதப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதன்படி, இறுதியாக முறுக்கு பிழிந்து, எண்ணெயில் போட்டு பொறித்து சாப்பிடுங்கள்.