மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நீரிழிவு தினம் இன்று!

- Advertisement -

இன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் தான் அதிகளவிலான நீரிழிவு நோயாளிகளாக இருக்கின்றார்கள்.

நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.

01 . முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.

02. இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

“உலகில் சர்க்கரை கலந்த மென்பானம் அதிகம் குடிக்கும் மெக்ஸிக்கர்கள்’
நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள்
பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவீதமானோருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.

ஆனால், நீரிழிவு நோயை வருமுன் காப்பதும், வந்த பின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக கொள்ளவேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் பிரதான அறிவுறுத்தலாக இருக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.

இதில் ஒரு நல்ல விடயமும் இருக்கின்றது.

இதில் என்ன நல்ல விடயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.

எப்படி தடுப்பது?

  • பிரதான உணவு பழக்கம் தான்.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.

அரோக்கியமான உணவு என்றால்? அதிக நார்சத்து உடைய உணவு வகைகள்தான். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும், ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.

பிரட், பாஸ்தா உணவு வகைகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கறி உணவினை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.

புரதசத்துக்கான மீன், முட்டை,பயறு வகை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் மீன் வறுத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஏனெனில் அவற்றில் அதிகளவிலான விட்டமின், மினரல் மற்றும் நார்சத்து உள்ளது.

கொழுப்பு சத்தும் நல்ல ஆரோக்கியமான உடல்நிலைக்கு நல்லது. ஆனால், அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆலிவ் எண்ணெய், மீன் கொழுப்பு உடலுக்கு நல்லது.

அதுபோல நீர்சத்து உடலில் எப்போதும் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.

தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்கிறது ஆய்வொன்று.

  • சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா?

உடற்பயிற்சி

மிகவும் அடிப்படையான தகவல்தான், உடற்பயிற்சி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன் ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

இதற்கு நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தினசரி நம் நடவடிக்கைகளை நாம் மாற்றி கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கலாம்.

அதனை சிறு வரைப்படமாக இங்கே பகிர்கிறோம்.
அதேநேரம் அண்மைய ஆராய்ச்சி ஒன்று 5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்று கண்டறிந்துள்ளது.

நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

Developed by: SEOGlitz