மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு!

- Advertisement -

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021 ஆண்டானது, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு! 1

“ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டிற்காக, “கூத்துப்பிரதிகள், இசைநாடகப் பிரதிகள், வானொலி நாடகப் பிரதிகள், பா நாடகப் பிரதிகள், சமய நாடகப் பிரதிகள், அரசியல் நாடகப் பிரதிகள், சமூக நாடகப் பிரதிகள், இதிகாச நாடகப் பிரதிகள் சிறுவர் நாடகப் பிரதிகள், மொழிபெயர்ப்பு, தழுவல் நாடகப் பிரதிகள் ஓரங்க நாடகப் பிரதிகள், வரலாற்று நாடகப் பிரதிகள், வீதி நாடகப் பிரதிகள், நிறுவன வழிவந்த நாடகப் பிரதிகள் ( பாடசாலை, பல்கலைக்கழகம், கல்லூரிகள், சபாக்கள்)” ஆகிய ஆய்வுத்தடங்களினூடான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஈழத்து தமிழ்நாடக வரலாற்றில் மகத்தான பணியை ஆற்றியுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் நடத்தப்படும் இந்த ஆய்வு மாநாடானது, ஈழத்தில் வெளிவந்த பல்வகையான தமிழ் நாடகப் பிரதிகளை, இலக்கியப் பிரதிகளாகக் கருதி, ஆராய்வதையும், அவற்றைச் சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தில் வைத்து வாசிப்பதையும் தனது கருப்பொருளுக்கான முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் மற்றும் திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் 0772323743 / 0778338766 ஆகிய தொலைபேசி எண்களூடாகவும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறிய முடியும்.

ஆய்வுக்கட்டுரைகளின் தலைப்பை அறிவிக்க வேண்டிய திகதி 25.10.2020 எனவும், கட்டுரையை அனுப்ப வேண்டிய திகதி 30.11.2020 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

கண்டியில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி கலஹா பகுதியில்  15 வயதுடைய  சிறுவன்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை...

Developed by: SEOGlitz