மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாடக விழா -2020

- Advertisement -

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலைய மாக விளங்குகின்றது.

நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

- Advertisement -

இவ்வருடம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நம்நாட்டில் நாடகத்துறையும் நாடகக் கலைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பாதிப்பிலிருந்து இத் துறையினர் மீண்டெழ வேண்டும் என்ற நோக்கில் டவர் மண்டப அரங்க மன்றம் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கு ஏற்ப “ப்ரேக்ஷா” என்ற நாடகவிழாவை மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்த்தன தலைமையில் நடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக சிங்கள நெடு நாடகங்கள், குறுநாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என 70வதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் மருதானை டவர் அரங்கிலும் எல்பின்ஸ்டன் அரங்கிலும் மேடை ஏற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந் நிறுவ னத்தின் தமிழ்துறை பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் செயற்பாட்டால் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் தமிழ் நாடக விழா ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில் 19 குறுநாடகங்கள் 5 நெடுநாடகங்கள் மேடை ஏறவுள்ளன.

கொழும்பு, கண்டி,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்கின்றனர்.

கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத் திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.

இந்த நாடக விழாவில் அரங்கேறவுள்ள நாடகங்களின் விவரம் வருமாறு
2020 ஒக்டோபர் 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” என்ற நாடகங்களும் ஒக்டோபர் 04 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின்“நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி”யும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்புடி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை”யும் ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரசபணி;க்காகமட்டும்” பி.சிவபிரதீபனின் “வந்தவன்” ஏ.இளங்கோவின் “கொவிட்-19”னும் ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டைவிரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கிகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறுகின்றன.

2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஓக்டோபர் 9ஆம் திகதி தர்~னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது” ஓக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்” ஓக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தா வின் வ(ர)ம்பு ஓக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவுள்ளன.

இலவசமாக நடத்தப்படவுள்ள இவ்விழாவில் எமது தமிழ் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரசிகபெருமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவலின் இரண்டாவது அலையின் வீரியத்தை  கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றில் இருந்து  இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

Developed by: SEOGlitz