மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதிகள் – ஒரு நாளைக்கான கட்டணம்…!

- Advertisement -

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவதற்காக நட்சத்திர விடுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டண அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல விடுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இலங்கை இராணுவத்தால் கண்காணிக்கப்படும் குறித்த விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 7ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இன்று முதல் பல விமானங்கள் இலங்கைக்கு வர உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு இலங்கை வரும் அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டமாக  Jetwing Blue மற்றும் Citrus Waskaduwa ஆகிய நட்சத்திர விடுதிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...