மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மாவட்டத்தில் 30 சதவீதமானோருக்கு டெல்டா…

- Advertisement -
கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவான கொவிட் 19 தொற்றாளர்களில் சுமார் 20 முதல் 30 சதவீதமானோர் டெல்டா வகை தொற்றாளர்களாக இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளை பரிசோதித்ததன் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்..
கொழும்பில் 10 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 2 முதல் 3 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அதனை 30 சதவீதமாக கருது வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் ஏனைய பகுதிகளில் இந்த வைரஸ் இல்லை என கூற முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz