மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் – விபரம் உள்ளே..!

- Advertisement -

நாட்டின் 3 மாவட்டங்களின் 12 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -

கம்பஹா மாவட்டத்தின் எல்தெனிய கிழக்கு, சூரியபலுவ தெற்கு மற்றும் வடக்கு, கரகஹாமுள்ள வடக்கு, ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் பிம்புற மற்றும் யட்டியான கிழக்கு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் ஹல்புத, கெஸ்பேவ கிழக்கு, நியுன்கம, மாகந்தன்ன மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பெலவத்த கிழக்கு, இங்குருதலுவ, மிரிஸ்வத்த, பஹல ஹிவஸ்ஸ ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz