மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா – சுகாதாரதுறை விசேட எச்சரிக்கை..!

- Advertisement -

நாட்டில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்காரணமாக அவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் நிலைமையானது எந்த அளவில் காணப்படுகின்றது என்பதை எதிர்வரும் நாட்களில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை அடிப்படையாக கொண்டு தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது என்பன குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு பக்கத்தில் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz