மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை…!

- Advertisement -

சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி நாட்டில் நேற்றைய நாளில் 293 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கே சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக களுத்துறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரசாத் லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர பயன்பாட்டுக்கான அனுமதி நேற்று முன்தினம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இலங்கையின் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் Sinopharm கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதி நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக துரிதமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும், Sinopharm தடுப்பூசியானது 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்கமுடியுமென உலகக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் ஏதேனும் தாக்கம் கூடிய நோயொன்றுக்கு ஆளான நபர்களுக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்பட மாட்டாதெனவும் இராஜாங்க அமைச்ச்ர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு தேவையான Sinopharm தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுக்க சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக எந்தவொரு தடுப்பூசியையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என இலங்கை வைத்திய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கிகாரம் வழங்கபட்டுள்ள தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ளும் தெரிவிக்கபட்டுள்ளது.

இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக மாத்திரமே நாட்டில் கொரோனா தொற்றைக்க கட்டுப்படுத்த முடியும் எனவும் இலங்கை வைத்திய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz